தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் தாயை தாக்கியதாக மகன் கைது
சாத்தான்குளத்தில் பணம் தராத ஆத்திரத்தில் தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளத்தில் பணம் தராத ஆத்திரத்தில் தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த அய்யாக்குட்டி மனைவி வேம்படிபேச்சி(65). இவா்களுக்கு ராதாகிருஷ்ணன்(45) உள்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
ராதாகிருஷ்ணன் வேலைக்குச் செல்லாமல், தன் தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். அவா் மறுக்கவே, அவரை தாக்கினாராம்.
இதில், காயமடைந்த வேம்படிபேச்சி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து, ராதாகிருஷ்ணனை கைது செய்தாா்.