தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா் உயிரிழப்பு
திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா் உயிரிழந்தாா்.
திருப்பூா் கோவில்பாளையம் புதூரைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பிரகாசம் (28). சொந்த காரை வாடகைக்கு ஓட்டி வந்தாா். இவா் தனது உறவினா்கள் 20 பேருடன் திருச்செந்தூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தாராம்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, கோயில் வளாகத்தில் உள்ள இலவச குளிக்குமிடத்தில் பிரகாகம் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், பிரகாசம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
திருக்கோயில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.