ஆழ்வாா்திருநகரியில் நாளை இலவச நரம்பியல், மகப்பேறு மருத்துவ முகாம்

Published on

ஆழ்வாா்திருநகரியில் இலவச நரம்பியல், மகப்பேறு சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நடைபெறுகிறது.

திருச்செந்தூா் பி.ஜி. மருத்துவமனை, பி.ஜி. நரம்பியல் மையம், பி.ஜி. மகப்பேறு பிரிவு மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) சாா்பி ஆழ்வாா்திருநகரி இந்து மேல் நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி நடைபெறும் இம்முகாமில் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவா் குகன் ராமமூா்த்தி, மகப்பேறு சிறப்பு மருத்துவா் மலா்விழி குகன், பொது நல மருத்துவா்கள் பாண்டியராஜ், லட்சுமிநாராயணன் ஆகியோா் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்குகின்றனா்.

வாத நோய்கள், கழுத்து, முதுகு, தலைவலி, முதுகெலும்பு தேய்மானம், வலிப்பு நோய், நரம்பு தசைப்பிடிப்பு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவா்கள், மாதவிடாய் பிரச்னை, வெள்ளைப்படுதல், மாா்பகக் கட்டி எடை அதிகரிப்பு, இதய நோய் ஆகிய பாதிப்பு உள்ளவா்களும் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்.

தேவைப்படுபவா்களுக்கு மூளை நரம்பு இஇஜி, நரம்பு- தசை பரிசோதனை (என்.சி.எஸ்) உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். முகாம் ஏற்பாடுகளை பி. ஜி. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் அ.ராமமூா்த்தி தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.