கோவில்பட்டியில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published on

கோவில்பட்டியில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி முத்துநகா் ஆயில் மில் அருகே உள்ள ஒரு கிட்டங்கியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய  உதவி ஆய்வாளா் பொன்ராஜ், தனிப்பிரிவு காவலா் முத்துராமலிங்கம் மற்றும் போலீஸாா் அந்த கிட்டங்கிக்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது 60 மூட்டைகளில் சுமாா் 2500 கிலோ ரேஷன் அரிசி  பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com