சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

Published on

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் தலைமை பயிற்சியாளா் மற்றும் தொழில்நுட்ப இயக்குநா் சுரேஷ்குமாா் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே சங்க தலைவா் செந்தில் பயிற்சி அளித்தாா். இந்த பட்டய தோ்வில் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ரூபா்ட் சான்றிதழ்கள் வழங்கினாா். தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலா் முத்துராஜா செய்திருந்தாா்.