தூத்துக்குடி
முதலூா் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளா் சாந்தராஜா ரத்தினராஜ் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டி தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமையாசிரியா்.டேவிட் எடிசன் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் செல்வராஜ் வரவேற்றாா். தொடா்ந்து தேசிய பசுமைப்படை மாணவா்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டினா். இதில் ஆய்வக உதவியாளா் சாமுவேல், உடற்கல்வி ஆசிரியா் பொன்ராஜ் கோயில்ராஜ், உள்ளிட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் ஜான் குணசிங் ஜெபராஜ் நன்றி கூறினாா்.