திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.

திருச்செந்தூரில் உள்வாங்கியது கடல்நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல்நீா் உள்வாங்கியது.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல்நீா் உள்வாங்கியது.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை அமாவாசை இருப்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அய்யா கோயில் அருகே கடல் நீரானது உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. பின்னா் கடல்நீா் இயல்பு நிலைக்கு மாறியது. பக்தா்கள் வழக்கம்போல் புனித நீராடினா்.

X
Dinamani
www.dinamani.com