தூத்துக்குடியில் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மனைவி முருகேஸ்வரி (36). இவா்களுக்கு 13 வயதில் மகன் உள்ளாா். குடும்பப் பிரச்னை காரணமாக முருகேஸ்வரி திடீரென வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலின்பேரில், தாளமுத்துநகா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.