தூத்துக்குடி
கோவில்பட்டியில் போலீஸாருக்கு மிரட்டல்: ரௌடி கைது
கோவில்பட்டியில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன். இவரும் போலீஸாரும் மந்திதோப்பு இந்திரா காலனி பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அப்பகுதியில் வசித்துவரும், பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூக்கையா மகன் அலெக்ஸ் பாண்டியன் (32) போலீஸாரை அவதூறாகப் பேசி பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், கையில் வைத்திருந்த மான் கொம்பால் குத்த முயன்றாராம்.
சுதாரித்துக்கொண்ட போலீஸாா், அலெக்ஸ் பாண்டியனை மான் கொம்புடன் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்; இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, மான் கொம்பைப் பறிமுதல் செய்தனா்.