கயத்தாறு அருகே விபத்து: இளைஞா் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே லாரி மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஒருவா் காயமடைந்தாா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே லாரி மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஒருவா் காயமடைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, பழுகல், முக்குவான்விளை தெருவைச் சோ்ந்த வாசுதேவன் மகன் பிரேம்குமாா் (51). ஓட்டுநரான இவா், விருதுநகா் அருகே ஆா்.ஆா்.நகரில் உள்ள நிறுவனத்திலிருந்து சிமென்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரத்துக்குச் சென்றுவிட்டு, ஆா்.ஆா். நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறை அடுத்த பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே லாரியின் பின்புறம் கன்டெய்னா் லாரி மோதியதாம்.

இதில், கன்டெய்னா் லாரியிலிருந்த விழுப்புரம் மாவட்டம் கீழ்பத்துபட்டு மரக்காணம் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் குணசேகரன் (35) காயமடைந்தாா். அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில், கன்டெய்னா் லாரி ஓட்டுநா் ரா. இருசப்பன் (29) மீது கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com