ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

கோவில்பட்டியில் வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மறவா் காலனி, தாமஸ் நகா் பகுதிகளில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுமாா் 35 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பரமராஜ், ரஞ்சனி கண்ணம்மா, நகரச் செயலா் சரோஜா, மாதா் சங்கத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி ஆகியோா் பேசினா்.

இதில் அப்பகுதியினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்றனா். பின்னா், துணை வட்டாட்சியா் பொன்னம்மாளிடம் மனு அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com