தூத்துக்குடி
மண்டல அளவிலான சதுரங்கம், வாலிபால்: முதலூா் தூய மிகாவேல் பள்ளி முதலிடம்
மண்டல அளவிலான சதுரங்கம், வாலிபால் போட்டியில், முதலூா் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
மண்டல அளவிலான சதுரங்கம், வாலிபால் போட்டியில், முதலூா் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில், சதுரங்கப் போட்டியில் முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவி மந்திரா முதலிடமும், ஹரிகிருஷ்ணன் 2ஆம் இடமும் பெற்றனா். 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான வாலிபால் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
மாணவா்-மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்ராஜ், ஆசிரியா்களை தாளாளா் சாந்தராஜா ரெத்தினராஜ், தலைமையாசிரியா் டேவிட்எடிசன், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பாராட்டினா்.