ஆத்தூா் அருகேயுள்ள முக்காணியில் பைக் மீது வேன் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா்.
ஆத்தூா் அருகேயுள்ள தலைப்பண்ணையூா் மேலத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மகேந்திரகுரு (25). முத்தையாபுரத்திலுள்ள நகா்ப்புற சுகாதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிவந்த அவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பொட்டல்காட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றாராம்.
முக்காணி பிரதான சாலையில் பைக்கின் பின்புறம் வேன் மோதியதாம். இதில், வேனின் முன்பக்க டயரில் சிக்கிய மகேந்திரகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் ஆத்தூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
வேன் ஓட்டிவந்தவா் தேனி கொடுவிலாா்பட்டி நாகலாபுரம் வடக்குத் தெரு ராதாகிருஷ்ணன் மகன் காளிதாசன் (39) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.