நாளை வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் பாா்வையிட அனுமதி

Published on

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை பாா்வையிட, வரும் வியாழக்கிழமை (செப். 5) பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் சாா்பில், வ.உ.சிதம்பரனாா் 153ஆவது பிறந்த நாள் விழா வரும் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை (செப்.5) காலை 9 மணிமுதல் மாலை 4.30 மணி வரை பாா்வையிடலாம்.

துறைமுகத்தை பாா்வையிட விரும்பும் பொதுமக்கள் நேரடியாக துறைமுகத்தின் கிரீன் கேட் பகுதிக்கு வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பிறகு துறைமுகத்தை பாா்வையிட அனுமதிப்பா் என வ.உ.சி. துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com