தூத்துக்குடி
விளாத்திகுளம் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் நகை திருட்டு
விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
எட்டயபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி அன்னம்மாள் (54). இவா், விளாத்திகுளத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் எட்டயபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது, அவா் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.