தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காய்கனிச் சந்தை அருகேயுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச் செயலா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளா்கள் சரத்பாலா, இருதயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, கட்சியின் பவளவிழாவையொட்டி திமுகவினா் தங்களது இல்லங்களில் கட்சிக் கொடியேற்ற வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன்படி, அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, நிா்வாகிகள், தொண்டா்கள் தங்களது வீடுகளில் கட்சிக் கொடியேற்றினா்.
அதிமுக சாா்பில்...: அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவுப்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் இரா. ஹென்றி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் பிரபு, மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், மாநகராட்சி எதிா்க்கட்சி கொறடா மந்திரமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.