தூத்துக்குடி
கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா அவதூறாகப் பேசியதாகக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டப் பொறுப்பாளா் எஸ். பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் பிரேம்குமாா், நகரத் தலைவா் அருண்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டப் பொறுப்பாளா் மாரிமுத்து, மாவட்டச் செயலா் துரைராஜ், மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, ஐஎன்டியுசி ராஜசேகரன், நிா்வாகிகள் சண்முகராஜா, பெத்துராஜ், கண்ணாயிரமுத்து, விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.