திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

Published on

சாத்தான்குளம் மத்திய ஒன்றியத்தில், திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.

முதலூரில் உள்ள மத்திய ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் ஆவின் தலைவரும், ஒன்றிய துணை செயலாளருமான சுரேஷ்குமாா், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, ஒன்றிய பொருளாளா் சுடலைக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி அன்னகணேசன், ஒன்றிய துணை செயலாளா் யோகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய ஒன்றிய செயலாளரும், முதலூா் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன் வரவேற்றாா். இதில் மாவட்ட துணை செயலாளா் ஆறுமுக பெருமாள், மாநில பேச்சாளா் சரத்பாலா ஆகியோா் பேசினா்.

இதில் கட்சி நிா்வாகிகள், கிளை செயலாளா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் மாவட்ட பிரதிநிதி நயினாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com