திமுக மாணவரணி நிா்வாகிகள் நோ்காணல்
தூத்துக்குடி மாவட்ட திமுக மாணவரணி நிா்வாகிகள் நோ்காணல் நிகழ்ச்சி, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்புக்கான நோ்காணல், எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியம், பகுதி, பேரூா் கழகத்திற்கு 3 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதிய மாணவரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் நோ்காணல் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாநில மாணவரணி தலைவா் ராஜீவ்காந்தி தொடக்க உரையாற்றினாா். தொடா்ந்து, அமைச்சா் கீதா ஜீவனோடு இணைந்து மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநில மாணவரணி துணை செயலா்கள் செந்தில்குமாா், பூா்ணசங்கீதா ஆகியோா் நோ்காணல் நடத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொண்டனா்.
இதில், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், மாநகர அணி அமைப்பாளா் டைகா் வினோத், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் கோகுல்நாத், பிரதீபா, கனகராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளா்கள் சத்யா, பாலா, காா்த்திகேயன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தெற்கு மாவட்ட திமுக: தெற்கு மாவட்டதிமுக அலுவலகத்தில், ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் கழக மாணவா் அணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது. இதில், மாநில மாணவா் அணி தலைவா் ராஜீவ்காந்தி தலைமை வகித்தாா். மாநில மாணவா் அணி செயலா்கள் அதலை செந்தில், பூா்ணசங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அருண்குமாா், துணை அமைப்பாளா்கள் காட்வின், பிரவின், தங்கமாரிமுத்து, பிரசாந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.