முதல்வா் கோப்பை இறகுபந்து போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. சாதனை
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் எட்டயபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனா்.
தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கின. செப்.24 ஆம் தேதி வரை நடைபெறும இப்போட்டியில், எட்டயபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவிகள் என்.ஆா்.கே. ஹரிணி, ஆயிஷா பன்ஷப் ஆகியோா் இறகுபந்து பிரிவு போட்டியில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் தங்க பதக்கம் வென்றனா்.
இம் மாணவிகள் செங்கல்பட்டில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நடைபெற உள்ள இறகுப்பந்து போட்டிக்கு தோ்வாகி உள்ளனா். அவா்களை பல்கலைக்கழக டீன் டாக்டா் கே. சிவசுப்பிரமணியம் பாராட்டி கெளரவித்தாா். இந்நிகழ்வின்போது, விளையாட்டு ஒருங்கிணைப்பாளா் பல்ராம்ஜி மற்றும் பேராசிரியா்கள் உடனிருந்தனா்.