கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி மீனாட்சி நகரை சோ்ந்தவா் முருகன் மகன் அய்யனாா் (29). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.
தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டாராம். சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அய்யனாா் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாராம்.
அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.