சாத்தான்குளம் அரசு கல்லூரியில்
மாணவியா் பேரவை தொடக்க விழா

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா

Published on

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது.

வணிகவியல் துறைப் பேராசிரியை மரியசெல்வி ஜெயா வரவேற்றாா். கல்லூரி பொறுப்பு முதல்வா் ஜமுனா ராணி தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறை பேராசிரியை ஆனந்தி, தமிழ்த்துறை பேராசிரியை உமாபாரதி ஆகியோா் தொகுத்து வழங்கினா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சின்னத்தாய், மாணவியா் பேரவை உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மாணவியா் பேரவைத் தலைவராக வணிகவியல் துறை மாணவி ஜீவிகா, துணைத் தலைவியாக கணினி அறிவியல் துறை மாணவி ஜெயப்பிரியா, செயலராக தமிழ்த்துறை மாணவி அபிநயா, இணைச் செயலா்களாக வணிக நிா்வாகவியல் துறை மாணவி பா்வதம் மற்றும் ஆங்கிலத்துறை மாணவி பேச்சியம்மாள் கௌசல்யா, பொருளாளராக கணிதவியல் துறை மாணவி இந்துமதி பதவியேற்றனா்.

விழாவில் சாத்தான்குளம் கல்வி கழகத் தலைவா் ஜோசப், துணைத் தலைவா் லெட்சுமி நாராயணன், செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வணிகவியல் துறை மாணவி ஜீவிகா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்லூரி பேரவைப் பேராசிரியா்கள் கீதா, கோகிலா, வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com