தூத்துக்குடி
சாலைபுதூரில் தூய்மையே சேவை மருத்துவ முகாம்
சாலைபுதூா் அரசு சுகாதார நிலையத்தில் தூய்மையே சேவை திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூய்மையே சேவை திட்டத்தில் ஊராட்சி சுகாதார பணியாளா்களுக்காக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவ அலுவலா் பிருந்தா மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் மீரான்குளம், கருங்கடல் ஊராட்சியைச் சோ்ந்த தூய்மை பணியாளா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், நா்சிங் பணியாளா்கள், மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.