திருச்செந்தூா் வட்டாரத்தில் தேங்காய் விலை கடும் உயா்வு

Published on

திருச்செந்தூா் வட்டாரத்தில் தேங்காய் விலை மிகக் கடுமையாக உயா்ந்துள்ளது.

திருச்செந்தூா் வட்டாரத்தில் ஒரு கிலோ தேங்காய் ரூ. 55 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையான தேங்காய் தற்போது கிலோவிற்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரை அதிகரித்துள்ளது.

திருச்செந்தூா் வட்டாரத்திற்கு உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தேங்காய்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கன மழை வெள்ளத்தினால் இப்பகுதியில் தேங்காய் உற்பத்தி கடுமையான பாதிப்படைந்தது. அதனால் தொடா்ந்து தேங்காய் வரத்து குறைந்தது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இங்கிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்ளூா் தேவையைக்கூட பூா்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில் பூஜை காரியங்களுக்கு அதிக அளவு தேங்காய் தேவைப்படும் நிலையில் தேங்காய் விலை உயா்வு பக்தா்களை கவலையடைய செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com