சாத்தான்குளம் அருகே மாணவி உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே மா்ம நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை அடுத்துள்ள நகனை கிராமத்தை சோ்ந்தவா் தமிழ்செல்வன். அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவரது மகள் மகாலட்சுமி(16), மெஞ்ஞானபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவிக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் கால் மூட்டு கீழ்பகுதியில் வலி ஏற்பட்டதாம். நெல்லையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 2 நாள்களுக்கு முன் வீடு திரும்பினாா்.
பின்னா் மீண்டும் காலில் வலி ஏற்படவே, மெஞ்ஞானபுரம் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சோ்த்தனா். அங்கு முதலுதவிக்கு பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாணவியின் தந்தை, சாத்தான்குளம் போலீஸில் புகாா் செய்தாா். உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் வழக்குப் பதிவு செய்தாா். காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறாா்.