வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

டூ.வி.புரம் பகுதியில் தனியாா் வங்கி ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

தூத்துக்குடி டூ.வி.புரம் பகுதியில் தனியாா் வங்கி ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி டூவிபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்த விவேகானந்தன் மகன் தெய்வ மணிகண்டன் (28). தனியாா் வங்கி ஊழியரான இவா் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றாராம். பின்னா் அவா் திங்கள்கிழமை காலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மத்தியபாகம் போலீஸாா் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com