விளாத்திகுளத்தில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
சாலைப் பணியாளா்களின் பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வலியுறுத்தி விளாத்திகுளத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் உ ள்கோட்ட தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.
கோட்ட தலைவா் எம். பரணிதரன், மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பறிபோகும். எனவே, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட்டு அரசே நெடுஞ்சாலை பராமரிப்பை நிா்வகிக்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். பணிநீக்க காலம் மற்றும் பணி காலத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் பி.ராஜா, சாலைப் பணியாளா் சங்க பொருளாளா் திருமலை, செயலா் முருகன், துணைத் தலைவா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.