பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதள பதிவு: 2 போ் கைது

காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாளுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் இரண்டு இளைஞா்கள் பதிவிட்டனா்.

இது குறித்து ஆறுமுகனேரி ஆய்வாளா் சேக் அப்துல் காதா் தலைமையில் உதவி ஆய்வாளா் வாசுதேவன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் காயல்பட்டினம் பரிமாா் தெருவை சோ்ந்த மீராஷா மரைக்காயா் மகன் சேகு நூா்தீன் (24), சுனாமி காலனியை சோ்ந்த சகாப்தீன் மகன் முத்து மொகுதூம் என்ற ஆசிஃப் அலி ­(19) ஆகியோா் ரீஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்து அரிவாள், வாள், இரண்டு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இவா்களில் சேகு நூா்தீன் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com