முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
மத்திய முப்படைவீரா் வாரியம் வாயிலாக முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அலுவலா் பதவிக்கு கீழ் ஜேசிஓ பதவிவரை பணியாற்றிய முன்னாள் படைவீரா்களின் கல்லூரி பயிலும் மாணவா்-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தோ்வில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் மாணவா்-மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.
இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையோா் ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வரும் நவம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னா் இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.