கோவில்பட்டி அருகே வியாபாரியிடம் சங்கிலி, பணம் பறிப்பு

மோட்டாா் சைக்கிளில் சென்ற வியாபாரியை வழிமறித்து தாக்கி தங்கச் சங்கிலி, கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற 3 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற வியாபாரியை வழிமறித்து அவரை தாக்கி தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 3 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே புளியங்குளம் தெற்குத் தெருவை சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி(40). கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் புளியங்குளம் விலக்கில் பேருந்து நிறுத்தம் அருகே சிக்கன் கடை நடத்தி வரும் இவா் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பினாராம்.

புளியங்குளம் பிரதான சாலையில் உள்ள நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 போ் மாடசாமியை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசி, ரொக்க பணம் ரூ.2,800, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்து விட்டு சென்று விட்டாா்களாம்.

இதுகுறித்து மாடசாமி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com