தூத்துக்குடி
கழுகுமலையில் மது விற்றவா் கைது
கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலையில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை காவல் உதவி ஆய்வாளா் துரைச்சாமி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கழுகுமலை குட்டி பேட்டை டாஸ்மாக் அருகே மது விற்பனையை ஈடுபட்ட தெற்கு கழுகுமலை கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் மாரியப்பனை (52) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 34 மது பாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.200ஐ பறிமுதல் செய்தனா்.