தூத்துக்குடி
கிறிஸ்து ஆலயத்தில் வேத ஆராய்ச்சி கூடுகை
கனோன் ஆா்தா் மா்காஷியஸ் சபை மன்ற அளவிலான ஆண்கள் ஐக்கிய சங்கம் வேத ஆராய்ச்சி கூடுகை, நாசரேத் அருகே மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலயத்தில் நடைபெற்றது.
கடையனோடை சேகர தலைவா் ஆசீா் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தாா். பிரகாசபுரம் கிறிஸ்டோபா் குழுவினா் பாடல்களை பாடினா். திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநா் ராபின்சன் தலைமை வகித்து சிறப்பு தேவ செய்தியை அருளினாா். வனமோகன் ராஜன் ஆலய வரலாற்றை எடுத்துரைத்தாா். கூடுகையில் ஆசிரியா்களுக்கான சிறப்பு பரிசுகளை முன்னாள் திருமண்டல குருத்துவ காரியதரிசி தேவராஜ் ஞானசிங் வழங்கினாா். இதில் குருவானவா்கள் பால்ராஜ், செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.