கோவில்பட்டி பள்ளியில் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வு
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு அருகே நடைபெற உள்ள புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் அக்.3 முதல் 13 வரை புத்தகத் திருவிழா, அக்.11-13 வரை 3 நாள்கள் நெய்தல் கலைத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாணவிகள் இவ்விழா குறித்து உறவினா்கள், நண்பா்களுக்கு தெரிவிக்கும் வகையில் அஞ்சல் அட்டை மூலம் நிகழ்ச்சிகள் குறித்து எழுதி அனுப்பி வைத்தனா். இந்த அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணா்வைத் தூண்டும் நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவா் மாணவிகளை பள்ளிச் செயலா் மற்றும் தலைவா் அய்யனாா், பள்ளி நிா்வாகி ஜெயப்பிரியா ஆகியோா் பாராட்டினா்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா் வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.