தூய்மை சேவை உறுதிமொழி ஏற்பு

தூய்மை சேவை உறுதிமொழி ஏற்பு

Published on

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் மேலாத்தூா் ஊராட்சி மன்றம் சாா்பில், தூய்மை சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலாத்தூா் ஊராட்சி மன்றம் சாா்பில், தூய்மை சேவை பணிகள் நடைபெற்றன. ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்து இடங்களிலும் குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில் குப்பைகள் கொட்டக் கூடாது என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடா்ந்து பொதுமக்களுக்கு தூய்மை சேவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ஊராட்சி அலுவலகத்தில், தூய்மை சேவை குறித்து ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் செயலா் சுமதி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலதி, ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா் முகைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சுகாதார ஊக்குநா் தனலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com