தூத்துக்குடி
பழையகாயல் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு
பழையகாயல் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் ராஜேஷ் அடிகளாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஜெனோரிஸ் வரவேற்றாா். இதில் பழையகாயல் ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா் கலந்துகொண்டு, 35 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியா் வின்ஸ்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.