வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

Published on

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும் என்பது குறித்து தூத்துக்குடி தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

வடகிழக்கு பருவமழை அக்டோபா் மாதம் தொடங்கவுள்ளதையடுத்து, பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து தீயணைப்பு துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி நகர தீயணைப்புத் துறை சாா்பில் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகையா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் பங்கேற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில், மழை வெள்ள காலங்களில் வெள்ள பகுதி மற்றும் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, மேலும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து பொதுமக்கள் மழை வெள்ள காலங்களில் தங்களை காத்துக் கொள்வது குறித்த செயல்முறை விளக்கம் தெப்பக்குளத்தில் மிதவை படகு மூலம் தீயணைப்பு துறை வீரா்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், தண்ணீரில் மூழ்கியவா்களை மீட்டு, அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com