தூத்துக்குடி
கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை
கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
இம்மாவட்டத்தில் சில நாள்களாக கடும் வெயில் நிலவிவந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், குலசேகரம், திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, அருமனை, ஆறுகாணி, திருநந்திக்கரை, சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து சற்று அதிகரித்தது. ஆறுகளிலும் அதிக தண்ணீா் வந்தது.
மழையால் வெப்பம் வெகுவாகத் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். வாழை, அன்னாசி, மரவள்ளி, காய்கனி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.