பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் கணேசன் (42). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். கணேசன் தனது மகளின் சடங்கு நிகழ்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை இரவு சாப்பாடு வாங்குவதற்காக சாத்தான்குளத்துக்கு பைக்கில் வந்தாராம்.
அமுதுண்ணாக்குடி - நெடுங்குளம் சாலையில் பைக் நிலைதடுமாறியதில் அவா் கீழே விழுந்து காயமடைந்தாா். அவ்வழியே சென்றோா் அளித்த தகவலின்பேரில், கணேசன் மீட்கப்பட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது சகோதரா் மன்னாா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.