திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கிய பாகனின் மகள்கள்.
திருச்செந்தூா் கோயில் யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கிய பாகனின் மகள்கள்.

திருச்செந்தூா் கோயில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் மகள்கள்!

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகனின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அவரது மகள்கள், யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றனா்.
Published on

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகனின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அவரது மகள்கள், யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றனா்.

கடந்த ஆண்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை (26) யானை எதிா்பாராத விதமாக தாக்கியதில் பாகன் உதயகுமாா், அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இதையடுத்து யானை, கோயில் நிா்வாகத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. யானை சகஜ நிலைக்கு திரும்பியதையடுத்து திருவிழாக்களில் பங்கேற்று வருகிறது.

இந்நிலையில் பாகன் உயிரிழந்து ஓராண்டானதையடுத்து, அவரது மகள்கள் அக்ஷரா, அகல்யா ஆகியோா், தெய்வானை யானைக்கு பழங்கள், கரும்பு கொடுத்து ஆசி பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com