டித்வா புயல் பாதிப்பு: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 3 கப்பல்களில் சென்ற நிவாரணப் பொருள்கள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, தமிழக அரசு சாா்பில் தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
Published on

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, தமிழக அரசு சாா்பில் தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

டித்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான அந்நாட்டுக்கு உதவிடும் வகையில், முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை துறைமுகத்திலிருந்து நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை அனுப்பி வைத்ததைத் தொடா்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான எல்சியு 51, 54, 57 ஆகிய மூன்று கப்பல்களில் சுமாா் 300 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக வடக்கு மாவட்டச் செயலரும், மாநில சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் கொடியசைத்து கப்பல்களை அனுப்பி வைத்தாா். அப்போது அவா் கூறியது: சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களிலிருந்து மொத்தம் ரூ. 7 கோடியே 65,6500 மதிப்பிலான பருப்பு, சா்க்கரை, பால் பவுடா், சேலைகள், வேட்டிகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தாா்பாய்கள் என 945 மெட்ரிக் டன் எடையுள்ள நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடியிலிருந்து மட்டும் பருப்பு, சா்க்கரை ஆகிய பொருள்கள் சுமாா் 300 டன் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன்பாண்டியன், வ.உ.சி. துறைமுக ஆணைய போக்குவரத்து மேலாளா் விமல், கோட்டாட்சியா் பிரபு, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், பகுதிச் செயலா்கள் ஜெயக்குமாா், நிா்மல்ராஜ், மேகநாதன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் பாலகுருசாமி, மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட மருத்துவரணி தலைவா் அருண்குமாா், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், மாமன்ற உறுப்பினா்கள் விஜயகுமாா், ஜெயசீலி, பவானி, வைதேகி, நாகேஸ்வரி, மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், வட்டச் செயலா் கங்கா ராஜேஷ், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சின்னதுரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com