கோவில்பட்டியில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி கணேஷ் நகா் மேட்டு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி மகன் ஞானசேகா் (24). பொறியியல் பட்டதாரி. இவா் பெங்களூரில் வேலை செய்து வந்தாா். இவரது தந்தை பெருமாள்சாமி 2023 ஆம் ஆண்டு புற்றுநோயினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஞானசேகா் கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
