கடம்பூா் அருகே விபத்து: சிறுவன் உயிரிழப்பு

கடம்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
Published on

கடம்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கடம்பூா் அருகே அயிரவன்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்தி (19). இவா், சனிக்கிழமை தனது உறவினரின் 5 வயது மகனை பைக்கின் முன்புறம் வைத்துக் கொண்டு, தென்னம்பட்டியிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம்.

அயிரவன்பட்டி அருகே டேங்கருடன் கூடிய டிராக்டா் பைக்கின் கண்ணாடியில் உரசியதாம். இதில், காா்த்தியும், சிறுவனும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். அப்போது, டிராக்டா் மோதியதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கடம்பூா் போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, டிராக்டரை ஓட்டிவந்த கோபாலபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் பொன்ராஜ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com