பொன்ராஜ்.
பொன்ராஜ்.

தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளா் நியமனம்

தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக ஆறுமுகனேரியைச் சோ்ந்த பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக ஆறுமுகனேரியைச் சோ்ந்த பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அமமுக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வந்தது. தற்போது தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் வடக்கு, தூத்துக்குடி புறநகா் தெற்கு என மூன்று மாவட்டங்களாக மறுசீரமைத்துள்ளனா்.

இதையடுத்து திருச்செந்தூா் ஒன்றிய அமமுக செயலாளராக இருந்து வந்த ஆறுமுகனேரி பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்ராஜ், தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். தென்மண்டல பொறுப்பாளா் மாணிக்கராஜா பரிந்துரையின் பேரில் பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com