நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிந்றன.

இதன் ஒரு பகுதியாக நாழிக்கிணற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், பக்தா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் பணிகள் துவங்க உள்ளன. இதையொட்டி, நாழிக்கிணற்றிலிருந்து மின்மோட்டாா் மூலம் தொட்டியில் தீா்த்தம் நிரப்பி, பக்தா்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டிற்கு பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com