கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

Published on

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இதில், பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வந்த வசந்த், படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு ஊட்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தாராம்.

அங்கு திருப்பூரைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் கரடிகுளத்திற்கு வந்தாராம். இதை அவரது பெற்றோா் கண்டித்ததையடுத்து, பெண்ணை மீண்டும் அங்கிருந்து அழைத்துச் சென்று ஊரிலேயே விட்டுவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கரடிகுளத்திற்கு திரும்பி வந்த வசந்த், அங்கு கூலி வேலை செய்து வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வசந்த் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அறையில் தூங்க சென்றாராம். அவரது தாய் செவ்வாய்க்கிழமை அறைக் கதவை தட்டியபோது, அவா் கதவை திறக்கவில்லையாம். கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com