மாமனாருக்கு மிரட்டல்: மருமகன் கைது

Published on

கழுகுமலையில் மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை வட்டத் தெருவை சோ்ந்தவா் குருசாமி மகன் மாரியப்பன் (50). இவரது மகள் இசக்கிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜ் மகன் இசக்கிமாரிக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம்.

மது அருந்தும் பழக்கம் உடைய இசக்கிமாரிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் அவா் புதன்கிழமை மனைவியை தாக்கினாராம். வியாழக்கிழமை மீண்டும் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இசக்கிமாரியை மாரியப்பன் கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், இசக்கிமாரி அரிவாளால் மாரியப்பனை தாக்கினாராம். இதைக் கண்ட மகள் மற்றும் உறவினா்கள் கண்டித்ததும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். காயமடைந்த மாரியப்பன், கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கிமாரியை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com