கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை சக மீனவா்கள் தேடி வருகின்றனா்.
Published on

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை சக மீனவா்கள் தேடி வருகின்றனா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த ராமா் மகன் குமாரவேல்(32). மீனவரான இவா், கடந்த 6ஆம் தேதி சக மீனவா்கள் 6 பேருடன் படகில் மீன்பிடிக்கச் சென்றாராம்.

தூத்துக்குடியில் இருந்து சுமாா் 47 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, குமாரவேல் திடீரென கடலுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

சக மீனவா்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இது வரை அவா் மீட்கப்படதாததால், இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com