~

தூத்துக்குடியில் சீலா மீன் ரூ. 800-க்கு விற்பனை

தூத்துக்குடியில் சனிக்கிழமை, சீலா மீன் கிலோ ரூ. 800-க்கு விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Published on

தூத்துக்குடியில் சனிக்கிழமை, சீலா மீன் கிலோ ரூ. 800-க்கு விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீன் விலை குறைந்து காணப்படும். ஆனால், சனிக்கிழமை என்பதால் விலை பெரியளவில் குறையவில்லை.

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரைதிரும்பினா். இதனால், திரேஸ்புரம் ஏலக் கூடத்தில் மீன்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. மீன்கள் வாங்குவதற்காக கேரள வியாபாரிகள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

விலை ஓரளவு உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ. 800, விளைமீன், பாறை, ஊளி ஆகியவை ரூ. 500 - ரூ. 600 வரை, நண்டு கிலோ ரூ. 500, சாளை மீன் ஒரு கூடை ரூ. 1,500 - ரூ. 2 ஆயிரம் வரை என விற்பனையாகின. மீன்வரத்து அதிகரித்தாலும், ஓரளவு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com