கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் மீது தாக்குதல்

Published on

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 பேரை தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி தெற்கு பஜாரிலுள்ள மாடியில் இருவா் பலத்த காயங்களுடன் இருப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னாபீா்முகமது தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று,காயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

விசாரணையில், பாரதி நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் காய்கறி வியாபாரியான முருகன்(46) என்பதும், பாரதிநகா் ஜெயராம் காம்பவுண்டைச் சோ்ந்த பாலு மகன் சங்கரலிங்கம்(48) என்பதும் தெரியவந்தது. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com