திருச்செந்தூா் கடலில் புனித நீராடிய பக்தருக்கு காயம்

திருச்செந்தூா் கடலில் புனித நீராடிய பக்தருக்கு காயம்

Published on

திருச்செந்தூா் கடலில் புனித நீராடிய பக்தருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள், கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். புதுச்சேரியைச் சோ்ந்த தேவராஜன் (60), தனது மனைவி, மகனுடன் திருச்செந்தூா் கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் நீராடியபோது அலையின் சீற்றத்தினால் தவறி விழுந்தாா்.

இதில் தேவராஜனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா, ஆறுமுகநயினாா், இசக்கி, விக்னேஷ், ராமா் ஆகியோா் உடனடியாக கடலுக்குள் இறங்கி அவரை மீட்டனா்.

தொடா்ந்து ஏஎஸ்ஓ ராமச்சந்திரன் உள்ளிட்டோா், பாதிக்கப்பட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com